வேறு நாடாக இருந்தால் மோகன் பகவத் கைது செய்யப்பட்டிருப்பார்: ராகுல் காந்தி

Siva
வியாழன், 16 ஜனவரி 2025 (07:53 IST)
இந்தியாவின் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மோகன் பகவத், வேறு நாடாக இருந்தால் கைது செய்யப்பட்டு இருப்பார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையவில்லை என்றும், ராமர் கோயில் கட்டப்பட்ட போது தான் இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்தது என்று கூறியுள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "சுதந்திர போராட்டத்தை பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை. அரசியலமைப்பு சட்டம் பற்றி அவர் என்ன சொன்னார் என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மக்களுக்கு தெரிவிக்கும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது.

அவர் கூறியவை தேசதுரோகம். அரசியலமைப்பு சட்டம் செல்லாது, ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதெல்லாம் செல்லாது என்று கூறுவதற்கு அவருக்கு பகிரங்கமான துணிச்சல் இருக்கிறது. இதுவே வேறு நாடாக இருந்தால், அவரை இந்நேரம் கைது செய்து விசாரணை செய்து இருப்பார்கள்," என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்