எம்.எல்.ஏவை மூர்க்கமாக தாக்கிய கேரள போலீஸ்! காங்கிரஸ் கண்டனம்!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (20:30 IST)
திருவனந்தபுரத்தில் மாணவர் சங்க போராட்டத்திம் போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் பல்கலைகழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வில் சராசரி மதிப்பெண்ணை தாண்டாத மாணவர்களுக்கு கூட கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாணவர்கள் அமைப்பு கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தின் போது போலீஸார் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் மாணவர்கள் மீது லத்தியடி தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மாணவர் அமைப்பு தலைவர் அபிஜித் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சாஃபி பரம்பில் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கலவரத்தின் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் சங்க தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்