ராஜஸ்தானில் இடைத்தேர்தல் ; 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி : அதிர்ச்சியில் பாஜக

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (15:29 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆளும் பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகள், மண்டல்கர் சட்டமன்ற தொகுதி, மேற்கு வங்காளத்தில் உள்ள உலுபெரியா மற்றும் நவுபாரா தொகுதிகளுக்கு கடந்த 29ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
 
அன்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில், அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரகு ஷர்மா மற்றும் கரண் சிங் யாதவ் ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், மண்டல்கர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தாகத் 12,976 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.
 
அதேபோல், மேற்கு வங்காளத்தின் தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
 
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 5 இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த விவகாரம் பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்