இந்த நிலையில் தற்போது புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ்ராவத், செய்தியாளர்களிடம் பேசிய போது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறினார். நாடு முழுவதும் தேர்தல் பணிகள் நியாமானதாகவும், நேர்மையானதாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக தேர்தல் முறைகளில் மாற்றங்களில் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு கண்டிப்பாக ஆதார் எண்னை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.