நோயாளியின் நுரையீரலில் கரப்பான் பூச்சி!அதிர்ச்சி சம்பவம்

Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (14:30 IST)
நோயாளி ஒருவரின்  நுரையீரலில் இருந்து 4 செமீ கரப்பான் பூச்சியை மருத்துவர்கள்  அகற்றியுள்ளனர்.
 
நமது அண்டை மாநிலமான கேரளாவில்  நபர் ஒருவருக்கு மூச்சுவிடுவதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டது.
 
இதுகுறித்து மருத்துவரை அணுகியுள்ளார். அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள்.  அவரது நுரையிரலில்   நுரையீரலில்  4 செமீ., கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.அதன்பின்,  டாக்டர் டிங்கு ஜோசப் தலைமையிலான மருத்துவ குழுவின் நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு அந்த கரப்பான் பூச்சியை அகற்றினர்.
 
கர்பபான் பூச்சி உள்ளே அழுக ஆரம்பித்திருந்தால் நோயாளிக்கு சுவாச பிரச்சனை மேலும் மோசமடைந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தனர்.
 
இந்த கரப்பான் பூச்சியை அவரது நுரையீரலில் இருந்து அறுவைச்சிகிச்சை மூலம் எடுக்க 8 மணி  நேரம் ஆகிவிட்டது என்று தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்