திண்டுக்கலில் தக்காளி ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்தான நிலையில் சாலையில் குவிந்த தக்காளியை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அப்பகுதியில் முக்கிய சந்தை பகுதியாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருகின்றன. இந்நிலையில் வேடச்சந்தூர் அருகே 3 டன் தக்காளியை எடுத்துக்கொண்டு மினிவேன் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.
நான்கு வழிச்சாலையில் மினிவேன் வந்துக் கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்ததால் மினிவேன் சாலையில் கவிழ்ந்தது. இதனால் அதில் ஏற்றி செல்லப்பட்ட தக்காளிகள் சாலையில் மலைப்போல் குவிந்தது. இதையறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் பலரும், அந்த சாலை வழியாக சென்றவர்களும் கொட்டிக்கிடந்த தக்காளியை சாக்கு, பிளாஸ்டிக் பை என கிடைத்ததில் அள்ளி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.