மரம் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (05:21 IST)
பீகாரை சேர்ந்தவர் பச்சா தேவி, மகாராஷ்டிராவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது மகனை ஒரு கும்பல் கொலை செய்தது.


 


இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், மகனை கொலை செய்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இது குறித்து காவல்துறையினரிடம் அப்பெண் பல முறை முறையிட்டும் பதில் இல்லை. இதனால், பச்சா தேவி டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து முறையிட நேரில் வந்திருந்தார்.

இதை அடுத்து, ஜந்தர் மந்தரில் மரத்தின் மேல் ஏறிய தேவி, தனது மகனுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் அப்பெண்ணிடம் சமாதானம் பேசி கீழே இறக்கினர்.
அடுத்த கட்டுரையில்