ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனுமன் கோவிலில் இரண்டு பேர் பூசாரிகளாக உள்ளனர். நேற்று மாலை, சாமிக்கு ஆரத்தி எடுப்பது யார் என இரண்டு பூசாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி, அடிதடியாக மாறியது.
இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் வழங்கினர். தப்பியோடிய பூசாரியை சில மணி நேரங்களில் காவல்துறை கண்டுபிடித்து கைது செய்தது.
சாமிக்கு ஆரத்தி எடுப்பதைச்சுற்றி ஏற்பட்ட தகராறில், ஒரு பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.