இதனை அடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மெத்தை, போர்வையுடன் வந்து சட்டமன்ற வளாகத்தில் இரவு தூங்க ஏற்பாடு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை "உங்கள் பாட்டி" என பாஜக அமைச்சர் அவினாசி கெலாட் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால், அவர்கள் நேற்று இரவு சட்டமன்றத்துக்குள் போர்வைகள், மெத்தைகள் கொண்டு வந்து தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.