மாதம் ரூ.149 = தொலைபேசி சேவை + இணைய சேவை + 250 சேனல்கள்....

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (16:11 IST)
ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான அமராவதியை நவீன தகவல் தொழில் நகரமாக வடிவமைத்ததில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக கவனம் செலுத்தி வருகிறார். 
 
அந்த வகையில், அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி, பள்ளிகளுக்கு மாணவர்கள் புத்தகம் சுமந்து செல்லாமல் செல்ல வழிவகை செய்தார். மேலும், இ-கவர்னஸ் மூலம் காகிதம் இல்லாத அரசாட்சியை நடத்தி வருகிறார். 
 
தற்போது பைபர் கிரேட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சேவையில் மாதம் ரூ.149-க்கு தொலைபேசி இணைப்பு, இணைய சேவை, 250 சேனல்கள் வழங்கப்பட உள்ளது. இதனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை விஜயவாடாவில் தொடங்கி வைக்கிறார்.
 
இணைய சேவை 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பாக வழங்கப்பட உள்ளது. 250-க்கும் மேலான தொலைக்காட்சி சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பும் வழங்கப்பட உள்ளது.
 
இந்த சேவை வரும் 2019 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இத்திட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்