கோழிக்கறி சாப்பிட 7 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (15:03 IST)
ஆந்திரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆந்திரா மாநிலம் வாரங்கல் மாவட்டத்திலுள்ள திருமலகிரியில் உள்ள ராஜபேட்டையில் இயங்கிவரும் கோழிப்பண்ணையில் பால்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி பணி செய்து வந்துள்ளார்.
 
நேற்றிரவு உறவினர் வந்ததால் பண்ணையில் இருந்து கோழி ஒன்றை எடுத்து சமைத்துள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பால்ராஜ் குடும்பத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
ஒருவேளை இரவு சாப்பிட உணவு காரணமாக இருக்குமோ என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்