மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள நிலங்களை விற்று வருவாய் ஈட்ட அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு கடந்த சில காலமாக பொதுத்துறை நிறுவனங்கள் சிலவற்றை தனியாருக்கு விற்றது அரசியல் ரீதியாக விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் நஷ்டத்தில் சென்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்றதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் மக்கள் நலத்திட்டங்களுக்கு உதவுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை புதிய ஒப்புதல் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான உபரி நிலங்கள், பழைய கட்டிடங்களை விற்று அதன்மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.