அந்த தப்பை திரும்ப செய்ய மாட்டோம்..! – வேட்பாளர்களை அடைத்து வைத்த காங்கிரஸ்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (14:30 IST)
நாளை கோவா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை கோவா சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் பல பகுதிகளில் வென்றிருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவிற்கு தாவியதால் காங்கிரஸ் கோவாவில் சரிவை சந்தித்தது. இந்த முறை அனைத்து புனித தலங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கட்சி மாறமாட்டோம் என சத்தியம் செய்த சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் வேட்பாளர்கள் பேரம் பேசப்படுவதை தவிர்க்க அவர்களை சொகுசு விடுதி ஒன்றில் காங்கிரஸ் தங்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்