இந்த ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பே இல்ல! – மத்திய அரசு கறார்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (15:07 IST)
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் வழக்கில் நடப்பாண்டில் இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைகள் தொடங்க உள்ள நிலையில் நடப்பாண்டிலேயே 50% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு “மருத்துவ மேல் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே 50% இட ஒதுக்கீடு வழங்குவது சாத்தியமற்றது” என தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதிலுக்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்