16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க கூடாது: நீட் பயிற்சி மையத்திற்கு கட்டுப்பாடு..!

Siva
வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:39 IST)
16 வயதிற்குட்பட்ட மாணவர்களை நீட் உள்பட பயிற்சி மையத்தில் மாணவர்களை சேர்க்கக்கூடாது என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பயிற்சி நிறுவனத்தை யாரும் எங்கேயும் எந்த நேரத்திலும் திறந்து விட முடியாது என்றும் பயிற்சி நிறுவனங்கள் தொடங்குவதாக இருந்தால் அதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும்  16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களை பயிற்சி மையத்தில் படிக்க அனுமதிக்க கூடாது என்றும் பயிற்சி மையங்கள் எந்த மாணவரிடமும் தனிச்சனையாக தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கு தயாராவதற்காக பத்தாம் வகுப்பிலிருந்து சிலர் பயிற்சி மையத்தில் சேர்ந்துவிடுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து வந்த புகாரியின் அடிப்படையில் இனி பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த பின்னரே பயிற்சி மையத்தில் சேர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 16 வயதுக்கு குறைவாக பயிற்சி மையத்தில் சேர்க்கக்கூடாது என்றும் அதை மீறி சேர்த்தால் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை எடுத்த படம் என்றும் குறிப்பாக 25,000 விதிக்கப்படும் என்றும் இரண்டாவது முறை அதே தவறை செய்தால் ஒரு லட்சம் மூன்றாவது முறை அதே தவறை செய்தால் பயிற்சி மையம் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

மேலும் ஒரு மாணவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு, அதன்பின் பயிற்சியை பாதியில் விட்டுச் செல்ல நேர்ந்தால் பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்