கடந்த 2022-ன் கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023-ன் கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்ததாக கனடா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கனடா செல்லும் இந்திய மாணவர்களில் 86% சரிவு ஏற்பட்டுள்ளது.
மூன்று காரணங்களால் இந்திய மாணவர்கள் கனடாவுக்குப் பதிலாக வேறு நாடுகளை தேர்வு செய்யத் தொடங்கி உள்ளனர். ஒன்று, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் கசப்பான உறவு. இரண்டாவது, இந்திய மாணவர்கள் தங்குவதற்கு இங்கு போதுமான அளவு வீடுகள் இல்லாதது. மூன்றாவது, இங்குள்ள பல கல்வி நிலையங்களில் போதுமான கல்வி வசதிகள் இல்லாதது என கனடா அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.