இனி கட்டணம் இல்லை - பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு சிபிஎல்இ அறிவிப்பு!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (12:42 IST)
சிபிஎல்இ படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இறந்து இருந்தால் மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
கொரோனாவால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவி வருகின்றன. இந்த நிலையில் சிபிஎல்இ படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இறந்து இருந்தால்  மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்கள் கொரோனா பாதிப்பால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்தவா்களாக இருந்தால் அவா்கள் பதிவு கட்டணமோ, தோ்வு கட்டணமோ செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்