சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் ரிலீஸ்

வெள்ளி, 30 ஜூலை 2021 (15:59 IST)
இன்று சிபிஎஸ் இ மாணவர்களுக்கான  பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை http://cbse.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில் 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்ட நிலையில் இன்று சிபிஎஸ்இ மாணவர்களுக்கான  பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் வெளியாகியுள்ளது.

இதில், மாணவர்கல் 70,004 பேர் 95% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11.5% மாணவர்கள் 90-95% வரை மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

மேலும், மாணர்கள் தங்களின் தேர்ச்சிக்கான  சான்று, மதிப்பெண் சான்றை இணையதளத்திலும், டிஜிலாக்கர் தளத்தில் பதிவிறக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்ணில் 30% பிளஸ் ட் மதிப்பெண்ணில், 30 சதவீதம் பிளஸ் 2 அலகுத் தேர்வின் அடிப்படையில் 40% மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்