கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளி கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு முதல் அனைத்து பள்ளி தேர்வுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன
ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்றும் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற திட்டமிட்டிருப்பதாகவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த தேர்வை நடத்த வேண்டுமா? என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. இது குறித்த வழக்கு ஒன்றும் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது ’ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சிபிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாக நாளை மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
எனவே ஜூலை 1 ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா? இல்லையா? என்பது நாளைக்குள் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது