கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்புகள் இல்லாத மாவட்டங்கள், சில பகுதிகளில் மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் . தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். தேர்வர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும், தேர்வறைக்கு வரும் போது சானிடைசர்கள் கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த கொரோனா காலத்தில் தேர்வு தேவையா என பலரும் விமர்சனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.