எதுக்கு 2 - 3 வாரம்? மொத்தமா 3 மாதங்களுக்கு Lockdown நீட்டிப்பு!!

Webdunia
திங்கள், 18 மே 2020 (13:29 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 
இந்நிலையில் மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிந்து நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,169 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,029 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 36,824 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 33,053, குஜராத்தில் 11,379, தமிழகத்தில் 11,224, டெல்லியில் 10,058, ராஜஸ்தானில் 5,202, மத்திய பிரதேசத்தில் 4,977 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளனர். அப்போது பல ஆயிரம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஊரடங்கு எவ்வளவு மாதங்கள் நீட்டிக்கப்படுமோ?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்