முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ சோதனை.. மத்திய அரசை குறை சொன்ன சில நாட்களில் ரெய்டு..!

Siva
வியாழன், 22 பிப்ரவரி 2024 (15:47 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் மத்திய அரசை குறை சொன்ன சில நாட்களில் அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடந்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டையும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே குற்றம் தாக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் என்பவர் வீட்டில் சிபிஐ சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்யபால் மாலிக் மற்றும் அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாகவும் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக அவர் இருந்தபோது நீர்மின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புல்வாமாவில் 40 துணை ராணுவ படை வீரர்கள் கொல்லப்பட மத்திய அரசுதான் காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டிய நிலையில் இந்த குற்றச்சாட்டு கூறிய சில நாட்களில் அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்