பிரதமர் நரேந்திரமோடி நாளை ஜம்முவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, ரூ.30,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
ஜம்முவில் உள்ள மெளலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது, 30,500 ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதில், ஜம்முவின் விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, செனாப் ரெயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.