நர்மதை நதியில் பஸ் கவிழ்ந்து விபத்து.. 13 பேர் பலி! – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (13:34 IST)
மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து புனேவுக்கு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இருந்து மகாராஷ்டிராவின் புனேவுக்கு பேருந்து ஒன்று இன்று காலையில் பயணித்துள்ளது. தார் மாவட்டம் கல்கோட்டில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

ஆற்றில் கவிழ்ந்த பேருந்தில் பயணிகள் பலர் சிக்கியிருந்த நிலையில் அங்கிருந்த மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் ஆற்றில் மூழ்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்கள் உடல்களை தேடும் பணி தொடர்கிறது. இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்