நாளை முதல் அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் இயங்காது: அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (13:24 IST)
நாளை முதல் அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் இயங்காது: அதிரடி அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியை குறி வைத்து நடந்த வன்முறையை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராடி வந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு கிடைத்தது
 
இதனை அடுத்து இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியதை அடுத்து பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் இதை வெளியிட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்