கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்: முன்னாள் பேராயர் கைது

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (19:21 IST)
கேரளாவில் பேராயராக இருந்த பிராங்கோ என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேராயரை தற்காலிக நீக்கம் செய்து சமீபத்தில் வாடிகன் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த கேரள போலீசார் இன்று முன்னாள் பேராயர் பிராங்கோவை கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பாலியல் குற்றத்திற்காக பேராயர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்