முதுகை படிகட்டாக்கிய கேரள வாலிபருக்கு கார் பரிசு!

திங்கள், 10 செப்டம்பர் 2018 (14:56 IST)
கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்த போது தனது முதுகை படிகட்டாக்கி பெண்களை படகில் ஏற உதவிய மீனவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து கேரள மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. மழை வெள்ளத்தின் போது ஜெய்சல் என்ற மீனவர் மீட்புப் படையினருடன் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
 
அப்போது பெண்கள், முதியவர்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். ஜெய்சல் சற்றும் யோசிக்காமல்  படகிற்கு பக்கத்தில் குனிந்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்களை தனது முதுகின் மேல் ஏறி படகிற்கு செல்லுமாறு கூறினார்.
 
பெண்கள் சற்று தயக்கப்படவே, சும்மா ஏறுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். ஜெய்சலின் செயல்களை பொதுமக்களும் மீட்பு குழுவினருடன் பாராட்டினர். இது சமூகவலைதளத்தில் பரவி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ஜெய்சலை பாராட்டும் வகையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த மகிந்ரா நிறுவனத்தின் டீலர் சார்பில் கார் ஒன்று அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய செய்சல் எந்த விருதையும் பரிசையும் எதிர்பார்த்து மீட்புப் பணியில் ஈடுபடவில்லை என் கடமையை மட்டுமே செய்தேன் என பெருந்தன்மையுடன் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்