இந்த நிலையில் கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டு தொடர்பாக ஜலந்தரில் உள்ள மிஷனரிஸ் ஆப் சபை கூறியுள்ளதாவது: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளித்துள்ள கன்னியாஸ்திரி தன்னுடன் ஒன்பது பேரை சேர்த்துக் கொண்டு பிஷப்புக்கு எதிரான சதிவேலை செய்து வருவதைக் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளது.
இந்த ஒன்பது பேரும் ஆலயத்தின் வருகை படிவேட்டை தங்கள் வசம் வைத்திருந்து இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் திருச்சபை சந்தேகம் எழுப்பியுள்ளது.இந்த நிலையில் தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி கூறுகிற தேதியில் அதாவது2015 மே23ல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததாக புகைப்படங்களை ஆதாரம் காட்டியுள்ளது.