சிரிப்பாய் சிரிக்கும் பாஜகவினரின் புத்திசாலித்தனம்?

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (18:41 IST)
பசு மாட்டுக்கு தேசத்தின் அன்னை என்ற அங்கீகாரத்தை கொடுக்க கோரி உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது உத்தரகாண்ட் மாநில கால்நடைத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா பேசியது சிரிப்பாய் சிரிக்கிறது. 
 
அதாவது, விலங்குகளிலேயே பசு மட்டும் தனி ரகம். அது சுவாசிப்பதும் ஆக்சிஜன்தான், வெளியே விடுவதும் ஆக்சிஜன்தான் என்று முற்றிலும் வினோதமான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் ரேகா ஆர்யா.
 
அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. தாவரங்களை தவிர மற்ற எந்த ஜீவராசியும் ஆக்சிஜனை வெளியிடாது. கார்பன் டை ஆக்சைடுதான் வெளிவிடும். இது கூட தெரியாமல் கால்நடைத்துறை அமைச்சராக இவர் இருக்கிறாரா் என்று கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்