ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது: சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை கோரிக்கை

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (09:45 IST)
விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு, இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய வகையில் வைத்துள்ள கோரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
டெல்லியில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் அடுத்த வாரம் நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்ளவேண்டும் என்று ராஜபக்சவை நேரில் சந்தித்து சுப்பிரமணிய சுவாமி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். 
 
இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி, , ‘விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை மற்றும் இந்திய நாட்டு மக்களைக் காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவுக்கு, மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியது போல் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’ என கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த டுவீட்டுக்கு தமிழர்களிடம் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள நெட்டிசன்களிடம் இருந்து பெரும் கண்டனங்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்