நாய்களுக்கு செலவு அதிகம்: இலங்கை ராணுவத்தில் கீரிகள்!

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:27 IST)
ராணுவத்தில் மோப்ப நாய்களை வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பயன்படுத்துவர். ஆனால், இலங்கை ராணுவத்தில் நாய்களுக்கான செலவுகள் அதிகம் என்பதால் கீரிகளை பயன்படுத்துகின்றன. 
சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நாய்களை விட கீரிகளுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருப்பதாகவும், அவை சிறப்பாக வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதாகவும் இலங்கை ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும், நாயை விட கீரிகள் நன்றாக செயல்படுகிறது. நாயை பொறுத்தவரை தனது தலைக்கு கீழ் உள்ள வெடிகுண்டுகளையே மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க முடியும். 
 
ஆனால் கீரிகளால் தரைப்பகுதி மட்டும் அல்லாமல் தனது தலைக்கு மேலே உள்ள வெடிகுண்டுகளையும் கண்டுபிடிக்க முடிகிறது. ஒரு இடத்தில் வெடிகுண்டு இருப்பது தெரிந்தால் அந்த இடத்திற்கு சென்று கீரி அமர்ந்து கொள்ளும் அதை வைத்து எளிதாக வெடிகுண்டுகளை அகற்றி விடுகிறோம் என தெரிவித்துள்ளனர். 
 
கடந்த 2 ஆண்டுகளாகவே கீரிகளை பயன்படுத்தி வெடிகுண்டுகளை கண்டு பிடிப்பதற்கு பயிற்சி நடந்து வந்தது. இப்போது 9 கீரிகளை ராணுவத்தில் சேர்த்துள்ளனர். அதில் 2 கீரிகளுக்கு பணிகள் வழங்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க அனுப்பப்பட்டு வருகிறது. மற்ற 7 கீரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்