தேர்தல் வந்தாச்சு... ரியாலிட்டி செக் - பிபிசியின் பிரத்யேக சேவை

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (18:16 IST)
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் அரசியல் கட்சிகளின் கூற்றுகள் குறித்து ஆய்வு செய்ய ரியாலிட்டி செக் என்ற பிரத்யேக சேவையை பிபிசி செய்திகள் துவங்கியுள்ளது. இன்று முதல் ஆங்கிலம் மற்றும் பிற ஆறு இந்திய மொழிகளில் ரியாலிட்டி செக் செய்திகள் வெளியாகும். 
 
இந்த ரியாலிட்டி செக் சேவையில் அரசியல் கட்சிகள் கூறும் கூற்றுகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய தரவுகளை பயன்படுத்தி, அதன் பின்னால் இருக்கும் உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்படும். குறிப்பாக பணவீக்கம், பாதுகாப்பு, தூய்மை இயக்கங்கள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு போன்ற தலைப்புகளில் அரசியல் கட்சி கூறும் கூற்றுகள் ஆராயப்படும். 
 
இது குறித்து பிபிசியின் இந்திய மொழிகளுக்கான ஆசிரியர் ரூபா ஜா, பிபிசியின் ரியாலிட்டி செக் மூலமாக, இந்தியாவில் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தும் முக்கிய செய்திகளை விவரித்து, நேயர்களுக்கு வழங்குவோம். இந்த தேர்தல் நேரத்தில், நம்பகத்தன்மையான தகவலை தரும் செய்தி நிறுவனமாக விளங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
 
ஏற்கனவே போலிச் செய்திகள் குறித்தும், டிஜிட்டல் அறிவாற்றல் பயிற்சிகளை பிபிசி மேற்கொண்டதை தொடர்ந்து, ரியாலிட்டி செக் என்ற புதிய சேவையையும் துவங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்