யார் யாருக்கு எங்கெங்கு எத்தனை? தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி

சனி, 16 பிப்ரவரி 2019 (18:52 IST)
விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதி பங்கீட்டில் சில பல குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த குழப்பங்களை தீர்க்கும் பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமி கையில் உள்ளதாம். 
 
ஆம், புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில், 15 தொகுதிகள் பாஜகவுக்கும், 25 தொகுதிகள் அதிமுகவுக்கு என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த 25 தொகுதிகளில் ஜிகே.வாசன், ரங்கசாமி, கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சில தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி பிரித்து கொடுக்க வேண்டும். 
 
15 தொகுதிகளில் பாஜவுக்கு 8 தொகுதிகளும், பாமகவுக்கு 4 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 3 தொகுதிகளும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 
 
இந்த தொகுதி பிரிவுகள் குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக பியூஷ் கோயல் மீண்டும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று சென்னைக்கு வரக்கூடும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்