கரூர் மாவட்டத்தில் 16 பணிகளுக்கு 10 கோடியே 52 லட்சங்களுக்கான திட்டங்கள் துவக்க விழா நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் தடை ஏற்படுத்தும் வகையில் முளைத்துள்ள சீமக் கருவேல மரங்களை அகற்றும் பணி துவங்கியது. இதை பார்வையிட்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் விரைவில் 2000 ஆயிரம் எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க உள்ளோம் என்றும்., முதல் கட்டமாக 500 பேருந்துகளும், 12,000 ஏர்பொலியூஷன் காற்று மாசு படுவதை தடுக்கும் வகையிலும் மொத்தம் 14 ஆயிரம் பேருந்துகள் மூன்று வருடங்களுக்குள் போக்குவரத்து துறை சார்பில் வாங்க உள்ளோம் என்றார்.
மேலும் அ.தி.மு.க., கட்சியின் கூட்டணி தொடர்பாக கேட்ட கேள்விக்கு, வலுவான கூட்டணித் தமிழகத்தில் உருவாகும், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., சார்பில் பேட்டியிடுவோர் வெற்றி பெறுவார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.,வுக்கும் என்ன உறவென்று தெரியும், அதே போல் அரசியலில் அந்த நேரத்திற்கு அ.தி.மு.க., கூட்டணியில் நல்லவர்கள் அமைவது சகஜம் என்றார்.