மதுக்கடைகள் திறப்பு! முண்டியடித்து க்யூ போட்ட குடிமகன்கள்!

Webdunia
திங்கள், 4 மே 2020 (11:41 IST)
பெங்களூரில் நீண்ட நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் மதுக்கடைகளில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. முதற்கட்டமாக மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. நாடு முழுவதும் மதுக்கடைகளும் மூடப்பட்டது. இதனால் மது கிடைக்காமல் கண்ட திரவங்களையும் குடித்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தது.

இந்நிலையில் இன்று முதல் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதுமே மது பிரியர்கள் மதுக்கடை வாசல்களில் தேவுடு காக்க தொடங்கி விட்டனர். பெங்களூரில் மதுக்கடைகள் முன்பாக தொடங்கி கிலோ மீட்டர் கணக்கில் மது பிரியர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்