மின் கட்டணத்திற்கு சலுகை: அரசுக்கு டிடிவி தினகரன் புது ஐடியா!!

Webdunia
திங்கள், 4 மே 2020 (11:33 IST)
மின் கட்டணம் செலுத்தும் அவகாசத்தை 2 மாதங்களுக்கு நீட்டிப்பதுடன், சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் என டிடிவி தினகரன் டிவிட் போட்டுள்ளார். 

 
அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதியை இரண்டு  மாதங்களுக்கு நீட்டிப்பதுடன், அதில் சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
வீடுகளுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை  200 யூனிட் ஆக மாற்றி அமைக்க வேண்டும். அதனடிப்படையிலேயே மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். 
 
இதன் மூலம் கொரோனா ஊரடங்கால்  வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும்  மக்களுக்கு ஓரளவுக்கு சுமை குறையும். மேலும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் இதுபோன்றதொரு மின் கட்டணச்  சலுகையைத் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்