காரின் விலை ரூ.11 லட்சம், ரிப்பேர் பார்க்க ரூ.22 லட்சம்: அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (13:42 IST)
காரின் விலை ரூ.11 லட்சம்,  என்ற நிலையில் அதை ரிப்பேர் செய்ய 22 லட்சம் கேட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
சமீபத்தில் பெங்களூருவில் கனமழை பெய்தது என்பதும் இதனால் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது என்பதும் தெரிந்தது
 
இந்த நிலையில் அனிருத் என்பவர் தனது  தனது காரை ரிப்பேர் செய்ய கார் நிறுவனத்திற்கு அனுப்பி இருந்ததாகவும் கார் ரிப்பேர் செய்ய எவ்வளவு கட்டணம் என்று கேட்டதற்கு கார் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் 
 
தனது காரின் விலையே 11 லட்சம் தான் என்றும் அந்த காரை ரிப்பேர் செய்வதற்கு பதில் 2 புதிய கார்கள் நான் வாங்கி விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
மேலும் அவர் கார் நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் சந்தித்த அவலங்களையும் தன்னுடைய பதிவில் பகிர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்