ராஜஸ்தான் புதிய முதல்வர் யார்? முடிவெடுக்க முடியாமல் சோனியா காந்தி திணறல்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (13:38 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக இருந்த அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்ட நிலையில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார் 
 
ராஜஸ்தானில் மொத்தம் 200 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் அசோக்கிற்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் அவர்கள் சச்சினுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவடைந்தவுடன் ராஜஸ்தான் புதிய முதல்வர் குறித்து முடிவு செய்யப்படுமா? அல்லது அதற்கு முன்பே இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்