ஏ.டி.எம். கார்டுகளில் கொரோனா வைரஸ்…ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 14 மே 2022 (23:32 IST)
கொரொனா வைரஸ் கடந்த 2019  ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது. இதந் பல்வேறு உருமாற்றம்  பரவி வருகிறது. இந்தாண்டு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் 4 ஆம் கொரோனா அலை பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும்போது, ஏடிஎம் கார்டுகளில் கொரொனா வைரஸ் அதிக  நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாய் நோட்டுகளில் கொரொனா வைரஸ் 30  நிமிடங்களுக்கு மேல்  இருப்பது கடினமானது எனவும், அந்த வைரஸ் அதன் பிறகு குறைந்திருந்தது எனவும்,  24 மணி நேரம்  மற்றும் அதற்கு மேல் கொரொனா வைரஸ் இல்லை.

ஆனால், ஏடிஎம் கார்டுகளிலும் கிரெடிட் கார்டுகளிலும் கொரொனா வைரஸை  48 மனி நேரத்திற்குப் பிறகும் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், எச்சரிக்கையுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்