கொரோனா வைரஸ் குறித்து கடந்த 2019ஆம் ஆண்டே சரியாக கணித்து கூறிய ஜோதிடர் அபிக்யா ஆனந்த், தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது:
மே 29-ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்று கூறினேனே தவிர அது கொரோனா வைரஸின் முடிவு காலம் அல்ல. ஜூன் மாதம் 30ஆம்தேதி தான் கொரோனா வைரசின் தாக்கம் குறையும். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் பெரும் பஞ்சம் ஏற்படும். மக்கள் உணவுக்காக திண்டாடும் நிலை ஏற்படும்
ஜூலை மாதத்திற்குப் பின்னர் உணவு பஞ்சம் மிக அதிகமாக வந்தாலும் அதற்கு நான் ஒரு வழி கூறுகிறேன். கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் அனைத்து கடைகளை மூடினாலும் விவசாயிகளை மட்டும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் எப்போதுமே சமூக விலகலை கடைபிடித்து தான் வேலை செய்வார்கள் என்பதால் அவர்களை உணவு தயாரிக்கும் பணியை நிறுத்த சொல்லக்கூடாது. அவ்வாறு நிறுத்த சொல்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். அரசு இதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறது என்று தெரியவில்லை.
இயற்கை விவசாயத்தை அழித்து விட்டு உணவுக்கு மாற்று ஏற்பாடு செய்வதால் தான் உடல்நலம் கெடுகிறது. இயற்கை விவசாயத்தால் கிடைக்கும் உணவை சாப்பிடாவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு குறையும். இதனால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்
கொரோனாவை இன்னும் ஒருசில மாதங்களில் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால் கொரோனா போல் பல வைரஸ்கள் தாக்கும்போது மனிதர்கள் அதனை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம் வேண்டும். எனவே விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட கூடாது. அதேபோல் விலங்குகளை உணவுக்காக பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்
மேலும் ஒரு முக்கிய எச்சரிக்கை. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை உலகம் மிக மோசமான ஒரு அழிவை சந்திக்க உள்ளது. இந்த மோசமான விளைவு கொரோனா பாதிப்பை விட பல மடங்கு இருக்கும். இந்த அழிவு என்ன? இந்த அழிவிலிருந்து தப்பிக்க என்ன வழி என்பதை விரைவில் கூறுகின்றேன்’ என்று ஜோதிடர் அபிக்யா ஆனந்த் தெரிவித்துள்ளார்