இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789 ஆக இருந்த நிலையில் தற்போது 5,194 ஆக உயர்ந்துள்ளது. 124 ஆக இருந்த பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமானவர்கள் எண்ணிக்கை 353 லிருந்து 402 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,018 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் ஏப்ரல் 14ல் முடிவதாக உள்ள நிலையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள முகக்கவசங்களை பயன்படுத்தும் படியும், கைகளை அல்கஹால் சானிடைசர் கொண்டும் கழுவும் படியும் அறிவுறுத்தி வருகின்றனர், ஆனால், இதில் அதிர்ச்சிகரமாக முகக்கவசங்களில் 7 நாட்கள் வரை கொரோனா இருக்கும் என ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.