தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு ஆரம்பம்: மும்முனை போட்டியில் யாருக்கு வெற்றி?

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (07:16 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம்  119 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் அதே நேரத்தில் பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி என்றும்  இந்த இரண்டில் எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட பிஆர்எஸ் கட்சி இந்த முறை ஆட்சியை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் சில ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன. மொத்தத்தில் இந்த ஐந்து மாநில தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்