தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்ததால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் திருவள்ளூரில் இன்று பள்ளி மற்றும் கல்லூரி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என செய்திகள் வெளியாகி உள்ளன