ரூ.300 கோடியில் இன்னொரு சூரிய கோவில்: ஒடிசாவில் கட்டுமானம் ஆரம்பம்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (07:00 IST)
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் உலகப்புகழ் பெற்ற சூரிய கோவில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கோவிலின் கோபுரத்தின் உயரம் தான் காண்போரை ஆச்சரியப்பட வைக்கும்

இந்த நிலையில் இதே வடிவத்தில் மற்றொரு சூரிய கோவில் கட்ட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.300 கோடியில் உருவாகவுள்ள இந்த கோவிலுக்காக 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சமீபத்தில் பூமி பூஜையும் நடந்துள்ளது.

பத்ம விபூஷண் விருது பெற்ற ரகுநாத் மகபத்ரா வடிவமைக்கவுள்ள இந்த கோவிலுக்கான புளுபிரிண்ட் தயாராகிவிட்டதாகவும், இந்த கோவில் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ ஜெகன்னாதர் மற்றும் கோனார்க்கில் உள்ள சூரிய கோவில் ஆகியவற்றை வடிவமைத்த முன்னோர்கள் கொண்ட பரம்பரை குடும்பத்தினை சேர்ந்தவர் தான் இந்த கோவிலுக்கு வடிவமைத்த ரகுநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்