இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் அஜித், விஜய் படங்களின் வசூலுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான இந்த படம் சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது. இந்த தொகை இந்த படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த படம் சென்னையில் ரூ.3.82 கோடியும், செங்கல்பட்டில் ரூ.7.85 கோடியும், கோவையில் ரூ.4.94 கோடியும், திருச்சி-தஞ்சை பகுதியில் ரூ.3.18 கோடியும் வகேரளாவில் ரூ.65 லட்சமும் கர்நாடகாவில் ரூ.1.54 கோடியும், வெளிநாட்டில் ரூ.7 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் இன்னும் சில நாட்கள் இந்த படம் வசூல் செய்தால் அஜித், விஜய் படங்களை ஓவர்டேக் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.