பிரபலமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குவதாக அறிவித்துள்ளது.
பிரபலமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருப்பவர் அனில் அம்பானி. திருபாய் அம்பானியின் இளைய மகன். 2006ம் ஆண்டில் தனது சகோதரர் முகேஷ் அம்பானியுடன், அனில் அம்பானிக்கு மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் சொத்துகள் பிரிக்கப்பட்டு முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்தை தொடங்கினார்.
அனில் அம்பானி ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவற்றில் கணிசமான பங்குகளை வைத்துள்ளார். சமீபமாக இவரது ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் ரிலையன்ஸ் குழும பங்குகளும் சரிவை சந்தித்தன.
இந்நிலையில்தான் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மூலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியுள்ளார் அனில் அம்பானி. இதற்காக ரிலையன்ஸ் ஜெய் ப்ராபர்டிஸ் என்ற கிளை நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் கையகப்படுத்துதல், விற்பனை செய்தல், குத்தகைக்கு விடுதல் போன்ற பல்வேறு ரியல் எஸ்டேட் சார்ந்த பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட உள்ளது.
மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் வேலையையும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K