ஸ்ரீதேவிக்காக துபாய் சென்ற அம்பானி விமானம்

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (16:23 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எதிர்பாராத வகையில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ,துணை முதல்வர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துபாயில் உள்ள ஸ்ரீதேவியின் உடலை மும்பை எடுத்து வர தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் அந்த விமானம் ஸ்ரீதேவியின் உடலுடன் மும்பை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஸ்ரீதேவியின் உடல் அந்நாட்டின் காவல் தலைமையகத்தில் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை உள்பட பல்வேறு நடைமுறைகளுக்கு பின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்