எனவே கட்சியின் அனைத்துவித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன்.கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன். கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நிர்வாகிகள்,மூத்தவர்கள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். பிரிய மனமின்றி பிரிகிறேன். என்னை வாழ வைத்த அதிமுகவின் அன்பிற்கு என்றும் நான் அடையாளமாக இருப்பேன் என கூறியுள்ளார்