தந்தையால் கர்ப்பமான 10 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி!

Webdunia
வியாழன், 18 மே 2017 (12:01 IST)
ஹரியானா மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தனது வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான சம்பவம் நடந்தது. இந்நிலையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய தற்போது அனுமதி கிடைத்துள்ளது.


 
 
ஹரியானாவில் ஒரு பெண் தனது மகளுடன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார். 10 வயதுடைய அந்த சிறுமியின் வயிறு வீங்கி பெரிதாக இருந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் 10 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
 
இதனையடுத்து 10 வயது சிறுமி எப்படி கர்ப்பமானார் என விசாரித்து போது தனது வளர்ப்பு தந்தையால் பலமுறை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக கர்ப்பமானதாகவும் தெரியவந்துள்ளது.
 
தான் பாலியல் பலாத்காரம் செய்வதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார் காம வெறிபிடித்த அந்த வளர்ப்பு தந்தை. இதனை தற்போது தான் அந்த சிறுமியின் தாய் அறிந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து அவர் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து 10 வயதான சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். மருத்துவ அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு கல்லூரியை சேர்ந்த மருத்துவர்கள் கூடி ஆலோசித்து அனுமதி வழங்கலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்தது.
 
இந்நிலையில் சிறுமிக்கு எந்த நேரத்திலும் கருக்கலைப்பு நடைபெறலாம் என மருத்துவக்கல்லூரியின் மருத்துவ மேற்பார்வையாளர் அஷோக் சௌகான் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்