ஹிண்டன்பர்க் அறிக்கை.. நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு ரூ.20,000 கோடி இழப்பு!

Siva
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (08:05 IST)
ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக நேற்று இந்திய பங்குச்சந்தை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் அதானி குழும நிறுவனங்களின்பங்குகள் சரிந்ததால் அந்நிறுவனத்திற்கு நேற்று ஒரே நாளில் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் செபி தலைவர் மாதபி புரி புச் என்பவர் அதானி நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கிறார் என்றும் எனவேதான் அந்த குழுமத்திற்கு எதிரான விசாரணையில் செபி முறையாக ஈடுபடவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த குற்றச்சாட்டு காரணமாக நேற்றைய பங்கு சந்தை மிகப்பெரிய அளவில் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் சரிந்தாலும் அதன் பின்னர் பங்குச்சந்தை பாசிட்டிவ் ஆக மாறியது என்பதும் ஆனால் அதே நேரத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மட்டும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய வர்த்தக முடிவில் 2.43 பில்லியன் டாலர் அதானி குழும நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் இது இந்திய மதிப்பில் சுமார் 20,400 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்